அர்னாப் புயலை எதிர்கொள்ள ஏனாமில் ஏற்பாடுகள் தீவிரம்
அர்னாப் புயலை எதிர்கொள்ள ஏனாமில் ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : அக் 28, 2026 02:44 AM
புதுச்சேரி: அர்னாப் புயலை எதிர்கொள்ள ஏனாமில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வங்க கடலில் நிலை கொண்டுள்ள அர்னாப் புயல் பாபட்லா விசாகப்பட்டினம் இடையே அதிதீவிர புயலாக இன்று (28ம் தேதி) கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடம் மீட்பு படையை சேர்ந்த 2 கம்பெனிகள் உட்பட மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஏனாமிற்கு சென்றுள்ளனர்.
பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க 19 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. புயலால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக, மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை மற்றும் மீட்புக் குழுவினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் ஏனாம் பிராந்தியத்தில் செயல்படும் மதுக்கடைகள் நாளை (29ம்தேதி) வரை மூட ஏனாம் மண்டல நிர்வாகி சிவராஜ்மீனா தெரிவித்துள்ளார். புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கும், அசம்பாவிதங்களைத் தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. புயல் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று பார்வையிட்டார்.
