தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குடியிருப்பு பகுதி வரை வந்த கடல் நீரால் திடீர் பரபரப்பு

குடியிருப்பு பகுதி வரை வந்த கடல் நீரால் திடீர் பரபரப்பு

குடியிருப்பு பகுதி வரை வந்த கடல் நீரால் திடீர் பரபரப்பு


ADDED : அக் 28, 2026 02:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2026 02:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் கரையோர குடியிருப்பு வரை கடல் நீர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக புதுச்சேரி மீன்வளத் துறை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என, எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் வீராம்பட்டினம் கடலில் இருந்து நேற்று இரவு 8:00 மணி அளவில் கடல் நீர் திடீரென குடியிருப்புகள் உள்ள சாலையோரம் வரை வந்ததால் மீனவர்கள் சுனாமி அலை என நினைத்து அச்சமடைந்தனர்.

பின், புயல் சின்னத்தால், கடலில் ஏற்றப்பட்ட அதிகப்படியான அலை சிற்றம் காரணமாக கடல்நீர் கடற்கரை ஓரம் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்தது தெரியவந்தது. அதன்பிறகே மீனவ மக்கள் நிம்மதி அடைந்தனர்

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us