/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'டிட்வா' புயலை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் தயார்: தேசிய பேரிடர் மீட்பு குழு இன்று புதுச்சேரி வருகை
/
'டிட்வா' புயலை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் தயார்: தேசிய பேரிடர் மீட்பு குழு இன்று புதுச்சேரி வருகை
'டிட்வா' புயலை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் தயார்: தேசிய பேரிடர் மீட்பு குழு இன்று புதுச்சேரி வருகை
'டிட்வா' புயலை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் தயார்: தேசிய பேரிடர் மீட்பு குழு இன்று புதுச்சேரி வருகை
ADDED : நவ 28, 2025 04:45 AM

புதுச்சேரி: வங்கக் கடலில் உருவாகியுள்ள 'டிட்வா' புயலின் பாதிப்பை தவிர்ப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை புதுச்சேரி அரசு முழுவீச்சில் முடுக்கவிட்டுள்ளது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 40 வீரர்கள் இன்று மாலை புதுச்சேரிக்கு வருகின்றனர். அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மதியம் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 640 கி.மீ., தொலைவில் புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு 'டிட்வா' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில், வடக்கு மற்றும் வடமேற்காக நகர்ந்து தமிழக கடற்கரை பகுதி வழியாக ஆந்திராவின் தென் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதனால், நாளை 29ம் தேதி மற்றும் நாளை மறுநாள் 30ம் தேதிகளில் புதுச்சேரி மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் தீவிர கனமழை மற்றும் மணிக்கு 80 முதல் 100 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' விடுத்து எச்சரித்துள்ளது.
புதுச்சேரியில் புயல் பாதிப்பை தவிர்க்கும் பொருட்டு, பேரிடர் மேலாண்மை துறை ஆணையரான கலெக்டர் குலோத்துங்கன் நேற்று மாலை அனைத்து துறை அதிகாரிகளுடனான அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
அப்போது, ஒவ்வொரு துறையும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வருவாய், போலீஸ், பொதுப்பணி, பேரிடர் மேலாண்மை, பொதுப்பணி மற்றும் மீன் வளத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் கட்டுப்பாட்டு அறை அமைத்து 24 மணி நேரமும் இயக்கிடவும், பொதுமக்கள் கேட்கும் அனைத்து உதவிகளுக்கும் ஒத்துழைப்பு அளித்திட உத்தரவிட்டார்.
மேலும், அனைத்து வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை இன்றைக்குள் அகற்றிடவும், மழை நீரை வெளியேற்றிட தேவையான பம்ப் செட்டுகள், ஜெனரேட்டர்கள், டீசல், மணல் மூட்டைகளை் தயார் நிலையில் வைத்திருக்கவும், மழையால் பாதிக்கும் பகுதி மக்களுக்கு உணவு வழங்க தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திடவும், மின் துறையினர் தேவையான உபகரணங்களுட்ன தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டார்.
மேலும் கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தேவையான ஜென்செட்டுகல் தயார் நிலையில் வைத்திருக்கவும், தீயணைப்பு வீரர்கள் மீட்பு உபகரணங்கள் மற்றும் வாகனங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். நீர்நிலைகளில் பொதுமக்கள் இறங்குவதை தடுக்க வேண்டும். சுகாதாரத்துறையினர் போதிய மருந்து, மாத்திரைகளுடன் கொம்யூன் அளவில் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தினார்.
பேரிடம் மீட்பு பணிக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 40 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர் இன்று மாலை புதுச்சேரிக்கு வர உள்ளனர். அவர்களில் ஒரு குழுவினர் காரைக்காலுக்கு அனுப்பட உள்ளது.
அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, 'டிட்வா' புயல் மற்றும் கனமழை பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாத்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

