/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் சொத்து கணக்கெடுப்பு ஆயத்த பணி துவங்கியது: இந்து சமய அறநிலைய துறை திடீர் சுறுசுறுப்பு
/
கோவில் சொத்து கணக்கெடுப்பு ஆயத்த பணி துவங்கியது: இந்து சமய அறநிலைய துறை திடீர் சுறுசுறுப்பு
கோவில் சொத்து கணக்கெடுப்பு ஆயத்த பணி துவங்கியது: இந்து சமய அறநிலைய துறை திடீர் சுறுசுறுப்பு
கோவில் சொத்து கணக்கெடுப்பு ஆயத்த பணி துவங்கியது: இந்து சமய அறநிலைய துறை திடீர் சுறுசுறுப்பு
ADDED : ஜன 10, 2025 06:18 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள கோவில் சொத்துகளை கணக்கெடுத்து பொதுமக்களின் ஆவணமாக வெளியிடஇந்து அறநிலைய துறை ஆயத்த பணிகளை துவங்கியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் இயல்பிலே ஆன்மீக பூமி. சித்தர்கள் உலாவிய புனித பூமி. பண்டை காலத்தில் புதுச்சேரி, வேதபுரி என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது. சின்ன சிறிய மாநிலமாக இருந்தாலும், இங்கு 1,500க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் மட்டும் 243 கோவில்கள் தற்போது உள்ளன.
அண்மை காலமாக கோவில் சொத்துகள் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிப்பது அதிகரித்துள்ளது. அதை தடுத்த கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்ட சூழ்நிலையில், இந்து அறநிலைய துறை அதற்கான ஆயத்த பணிகளை தற்போது துவக்கியுள்ளது. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களை கொண்டு கோவில் சொத்துகளை பதிவு செய்து, ஆவணப்படுத்த உள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் குறித்த முழு விவரங்களை பக்தர்கள் அறிய, ஒருங்கிணைந்த கோவில்கள் மேலாண்மை அமைப்பு' என்ற ஆன்லைன் போர்ட்டல உருவாக்கப்பட்டது.
இதில், கோவில்கள் முகவரி, திருவிழாக்கள், பூஜை விவரம், அவை நடக்கும் நேரம், கோவில்கள் அமைப்பு, வரலாறு, சிறப்பு அம்சங்கள் உள்ளிட்டவை இடம் பெறும் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தாண்டி, ஒவ்வொரு கோவிலின் அசையும் சொத்து, அசையா சொத்து விவரங்களை திரட்டி ஆன்லைனில் வெளியிடவும் முடிவெடுக்கப் பட்டது. இதற்கான பணிகளை கடந்த 2022ல் அப்போதைய கவர்னர் தமிழிசை துவங்கி வைத்தார். ஆனால் பணிகள் மந்த கதியில் நடந்தது.
இந்த ஒருங்கிணைந்த கோவில்கள் மேலாண்மை அமைப்பிலேயே, கோவில் சொத்து, தற்போது பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
கோவில்களின் கடவுள் சிலைகள், தங்கம், வெள்ளி, ஆபரணங்கள் மற்றும் இதர அசையும் சொத்துகள் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் திரட்டப்பட்டு, அவை பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
ஆன்மிக பூமியான புதுச்சேரி கோவில்களுக்கும், சுவாமிக்கும் சொத்துகளை தானமாக வழங்கும் வழக்கம், மன்னர்கள் காலம் முதற்கொண்டே இருந்து வந்திருக்கிறது. அந்த சொத்துகளை கொண்டு கோவில் திருப்பணிகள், பல்வேறு நற்பணிகள் நடந்தன. பிற்காலத்தில் செல்வந்தர்களும், வாரிசு இல்லாதவர்களும், தங்கள் சொத்துகளை கோவிலின் பெயரில் எழுதி வைக்கும் வழக்கமும் வந்தது. இப்படி, ஒவ்வொரு புராதன கோவிலின் பெயரிலும் ஏராளமான சொத்துகள் உள்ளன.
ஆனால், அவற்றுக்கு முறையான ஆவணங்கள் இல்லை. பல சொத்துகள ஆக்கரமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, அனைத்து கோவில் சொத்துகளை முதன்மையாக கணக்கெடுத்து, பதிவு செய்ய முடிவு செய்து, இந்து அறநிலைய துறை பணிகளை வேகப்படுத்தி வருகிறது.

