/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கரசூரில் தொழிற்சாலைகள் அமைக்க ஆயத்த பணிகள்... துவங்கியது
/
கரசூரில் தொழிற்சாலைகள் அமைக்க ஆயத்த பணிகள்... துவங்கியது
கரசூரில் தொழிற்சாலைகள் அமைக்க ஆயத்த பணிகள்... துவங்கியது
கரசூரில் தொழிற்சாலைகள் அமைக்க ஆயத்த பணிகள்... துவங்கியது
ADDED : மே 28, 2024 04:00 AM
புதுச்சேரி : கரசூர் தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகள் கொண்டு வருவதற்கான ஆயத்த பணிகளை துவங்கியுள்ள புதுச்சேரி அரசு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளது.
தொழில்துறையை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பை உருவாக்கவும் சிறப்பு பொருளாதார மண்டலம் தொடங்க மத்திய அரசு அறிவித்தது.
இத்திட்டத்தின் கீழ், கடந்த 2005-ல் புதுச்சேரி அரசு, சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்த 2007ம் ஆண்டு பிப்டிக் மூலம் சேதாரப்பட்டில் ரூ.72 கோடி செலவில் 748 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இந்த இடத்தில் அரசு மற்றும் தனியார் துறைகள் இணைந்து 18 மாதங்களில் சிறப்பு பொருளா தார மண்டலத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், மத்திய அரசு அனுமதி இல்லை. வழக்கு நிலுவை போன்ற காரணங்களால் கரசூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழிற்சாலைகள் கொண்டு வரப்படவில்லை.
இந்நிலையில் தற்போது மாநில அரசே தொழிற்பேட்டைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. அதனையொட்டி, கரசூர் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வருவதற்கான ஆயத்த பணிகளை துவங்கியுள்ள புதுச்சேரி அரசு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மாநில சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது.
தொழிற்பேட்டையில் எந்த இடத்தில் எந்த மாதிரியான தொழிற்சாலைகள் கொண்டு வர வேண்டும் என திட்டமிட்டு அதற்கான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்துவது அவசியம். அதற்கான ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டர் பணிகளை அடுத்த மாதம் துவங்க உள்ளது.
மொத்த இடத்தில் 65 சதவீதத்தை தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கவும், மீதமுள்ள 35 சதவீத இடத்தை உட்கட்டமைப்பிற்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
சென்னை ஐ.ஐ.டி., சர்வதேச அளவிலான ஆராய்ச்சி பூங்காவை புதுச்சேரியில் ஏற்படுத்த திட்டமிட்டு அணுகியுள்ளது. அதேபோல் , பார்மா தொழிற்சாலைகள் புதுச்சேரியில் தொழில் துவங்க ஆர்வமாக உள்ளன. அதனால், பார்மா தொழிற்சாலைகளுக்கு உடனடியாக இடம் ஒதுக்கி கொடுக்கவும், அதன்பிறகு படிப்படியா பிற தொழிற்சாலைகளுக்கும் இடம் ஒதுக்கப்பட உள்ளது.
இந்த தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் தண்ணீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஒருங்கிணைத்து ஏற்பட்ட அரசுக்கு குறைந்தபட்சம் ரூ.300 கோடி செலவிட வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.