/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறந்த எம்.எல்.ஏ.,வுக்கான விருது அசோக்பாபுவிற்கு வழங்கல்
/
சிறந்த எம்.எல்.ஏ.,வுக்கான விருது அசோக்பாபுவிற்கு வழங்கல்
சிறந்த எம்.எல்.ஏ.,வுக்கான விருது அசோக்பாபுவிற்கு வழங்கல்
சிறந்த எம்.எல்.ஏ.,வுக்கான விருது அசோக்பாபுவிற்கு வழங்கல்
ADDED : ஜன 29, 2024 04:51 AM

புதுச்சேரி : இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே பெயரில் தாதாசாகெப் பால்கே ஐகான் பிலிம்ஸ் விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தாதாசாகெப் பால்கே ஐகான் அவார்டு பிலிம்ஸ் அமைப்பு இந்த விருதினை ஏற்படுத்தி வழங்கி வருகின்றது.
ஒவ்வொரு துறைகளிலும் ஆளுமையில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து இவ்விருதினை வழங்கி கவுரவித்து வருகின்றனர்.
இந்தாண்டு நடத்திய சர்வேவில் மக்கள் பிரதிநிதிகள் ஆற்றிய பணிகள் அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்பட்டன.
அதில் புதுச்சேரி பா.ஜ.,எம்.எல்.ஏ., அசோக்பாபு தாதாசாகெப் பால்கே ஐகான் பிலிம்ஸ் கோல்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
டில்லியில் அன்மையில் நடந்த விழாவில், அசோக்பாபு எம்.எல்.ஏ.,வுக்கு தாதாசாகெப் பால்கே ஐகான் பிலிம்ஸ் கோல்டு விருது வழங்கப்பட்டது.
ஒடிசா முன்னாள் பா.ஜ., மாநில தலைவரும், லோக்சபா எம்.பி., யுமான பசந்த குமார் பாண்டா விருதினை வழங்கி பாராட்டினார்.
விருது பெற்ற அசோக்பாபு எம்.எல்.ஏ.,வுக்கு, பா.ஜ.,மாநில நிர்வாகிகள், தொழிலதிபர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.