/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லலிதாம்பிகை வேத சிவாக பாடசாலையில் சான்றிதழ் வழங்கல்
/
லலிதாம்பிகை வேத சிவாக பாடசாலையில் சான்றிதழ் வழங்கல்
லலிதாம்பிகை வேத சிவாக பாடசாலையில் சான்றிதழ் வழங்கல்
லலிதாம்பிகை வேத சிவாக பாடசாலையில் சான்றிதழ் வழங்கல்
ADDED : அக் 24, 2024 05:59 AM

குறிப்பு: அலுவலக விருப்பச் செய்தி
புதுச்சேரி: மொரட்டாண்டி லலிதாம்பிகை வேத சிவாக பாடசாலை மாணவர்களுக்கு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி சான்றிதழ் வழங்கினார்.
புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி நவக்ரஹ ஆலயத்தில் லலிதாம்பிகை வேத சிவாகம டிரஸ்ட் சார்பில் லலிதாம்பிகை வேத சிவாக பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கான 3ம் ஆண்டு தேர்வு நடந்தது.
கீதாசங்கர குருக்கள் தலைமையில் நடந்த தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி சான்றிதழ்களை வழங்கினார்.
இதில், நிறுவனர் சிதம்பர கீதாராம குருக்கள், அசோக் (எ) சுந்தரேச சர்மா, சுதேசி மில் நாகராஜன், தர்ம சம்ரக்ஷண சமிதி சீதாராம அய்யர், ரகோத்தமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.