UPDATED : நவ 02, 2026 05:47 PM
ADDED : நவ 02, 2026 05:45 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: கூட்டுறவு சங்கத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவருக்கு பாராட்டு விழாவில் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
புதுச்சேரி பி மற்றும் சி பிரிவு ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் கண்காணிப்பாளராக பணி புரிந்த ஜெயகோபாலன் ஓய்வு பெற்றார். அதையடுத்து, சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா புதுச்சேரியில் நடந்தது. சங்க தலைவர் வினாயகமூர்த்தி அவரை பாராட்டி ஓய்வு பலன் நிதியாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில், துணை தலைவர் முருகதாஸ், செயலாளர் அன்பரசன், இயக்குநர்கள், புவியரசு,செல்வம் உட்பட சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்று பாராட்டினர்.
