
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி மாநில பா.ஜ., அறிவுறுத்தலின் பேரில், யுவ மோர்ச்சா தலைவர் வருண், சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுதோறும் தேசிய கொடி வழங்கும் பணியை துவங்கினார்.
முதல் கொடியினை முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச் சங்க தலைவர் மோகனிடம் வழங்கினார். சங்க பொதுச் செயலாளர் செல்வமணி, பொது நலத் தொடர்பு அதிகாரி ராமமூர்த்தி உடனிருந்தனர்.