/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் ரம்ஜான் தொகுப்பு வழங்கல்
/
தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் ரம்ஜான் தொகுப்பு வழங்கல்
தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் ரம்ஜான் தொகுப்பு வழங்கல்
தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் ரம்ஜான் தொகுப்பு வழங்கல்
ADDED : மார் 30, 2025 03:51 AM

புதுச்சேரி: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, உருளையன் பேட்டை தொகுதி இஸ்லாமியருக்கு புடவை, அரிசி, மளிகை பொருட்கள் தொகுப்பினை தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் கோபால் வழங்கினார்.
உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பள்ளி வாசல் தெரு, சங்கோதியம்மன் கோவில், முல்லை நகர், செங்கேணியம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் வீடுகளுக்கு புடவை, அரிசி, மளிகை அடங்கி தொகுப்புகளை தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் கோபால் வழங்கினார்.
நிகழ்ச்சியில், தொகுதி செயலாளர் சக்திவேல், சசிகுமார், துணை செயலாளர் கண்ணதாசன், வர்த்தகர் அணி துணை தலைவர் குரு, துணை அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ், தொண்டர் அணி துணை தலைவர் மதனா, இளைஞர்அணி தாமரை, தொண்டர் அணி துணை அமைப்பாளர் சேட்டு, ஆதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் அன்பழகன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் வெங்கட், மாணவர் அணி துணை பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஸ்டீபன் ராஜ், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அர்ஜூன், விளையாட்டு அணி துணை அமைப்பாளர் யோகேஷ், தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் விமல், நிர்வாகிகள் முரளி, மூர்த்தி, பெரோஸ், அமர், பாண்டியன், பாக்யராஜ், ஆனந்த், பாபு, அமுல் நாராயணன், பிரவின், நாகராஜ், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.