/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரசிடென்சி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
பிரசிடென்சி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 11, 2025 01:15 AM

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளது.
பள்ளியின் மாணவன் கார்த்திகேயன், 592, மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
மாணவி கோபிகா 590 இரண்டாமிடமும், மாணவர்கள் ராம்பிரகாஷ், மனிஷ் அரவிந்த் 589 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.
சாதனை புரிந்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் கிறிஸ்டிராஜ், முதல்வர் ஜெயந்தி ராணி, துணை முதல்வர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் உடனிருந்தனர். மாணவி சீதாலட்சுமி வரலாறு பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.