பிரசிடென்சி பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்று சாதனை
பிரசிடென்சி பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்று சாதனை
ADDED : ஜூலை 04, 2026 03:27 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் போட்டியில் பங்கேற்று தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவர்கள் தேசிய அளவில் நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று தங்கம், வெள்ளி பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் கிறிஸ்டிராஜ், பள்ளி முதல்வர் ஜெயந்தி ராணி ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.
நிகழ்ச்சியில் பள்ளி செயலர் கவுதம், பள்ளி துணை முதல்வர் ஆரோக்யதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
