/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் விழா ஜனாதிபதி, பிரதமர், கவர்னர் வாழ்த்து
/
முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் விழா ஜனாதிபதி, பிரதமர், கவர்னர் வாழ்த்து
முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் விழா ஜனாதிபதி, பிரதமர், கவர்னர் வாழ்த்து
முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் விழா ஜனாதிபதி, பிரதமர், கவர்னர் வாழ்த்து
ADDED : ஆக 05, 2025 01:47 AM

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், மத்திய அமைச்சர்கள் தமிழக முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது 75வது பிறந்தநாளை நேற்று, கொண்டாடினார். அதனையொட்டி, திலாசுபேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அங்குள்ள தனது தாயார் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினார்.
தொடர்ந்து, கதிர்காமம் கதிர்வேல் சுவாமி, திலாசுபேட்டை விநாயகர் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், அப்பா பைத்தியம் சுவாமி கோவிலுக்கு சென்ற தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதையடுத்து, புதிய வீட்டிற்கு வந்த முதல்வர் ரங்கசாமியை, கவர்னர் கைலாஷ்நாதன் நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
முதல்வர் ரங்கசாமியை, ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் அமைச்சர் பொன்முடி, த.வெ.க., தலைவர் விஜய், ஐ.ஜே.க., தலைவர் பாரிவேந்தன் உள்ளிட்டோர் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா , தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் முருகன் ஆகியோர் எக்ஸ் தளத்திலும், முன்னாள் கவர்னர் தமிழிசை தனது முகநுால் பக்கத்திலும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், பிரகாஷ்குமார், பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில தலைவர் ராமலிங்கம், பல்வேறு மாநில முதல்வர்கள், கவர்னர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், என்.ஆர்.காங்., நிர்வாகிகள், அரசு செயலர்கள், அதிகாரிகள், டி.ஜி.பி., உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு மாநில முழுதும் என்.ஆர்.காங்., நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினர்.