/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காவல் துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்
/
காவல் துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்
ADDED : ஆக 16, 2025 03:06 AM

புதுச்சேரி: சுதந்திர தின விழாவில் சீனியர் எஸ்.,பி.,, அனிதா ராய்க்கு முதல்வர் ரங்கசாமி ஜனாதிபதி பதக்கம் வழங்கி பாராட்டினார்.
ஜி-20 உச்சி மாநாட்டில் அவரது ஏற்பாட்டு பணிகள், இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு சுய பாதுகாப்பு அளித்ததை நினைவு கூர்ந்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற எஸ்.பி., வீரவல்லபன், டி.ஜி.பி,., அலுவலக இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கி, அவர்களது காவல் சேவைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் மங்களம் போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, காவல் தலைமையக சிறப்பு நிலை சப் இன்ஸ்பெக்டர் சிந்து, உதவி சப் இன்ஸ்பெக்டர் சந்திரமொழி, மாகே போலீஸ் ஸ்டேஷன் உதவி சப் இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார் ஆகியோருக்கு முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது. முதல்வர் ரங்கசாமி விருதுகளை வழங்கி பாராட்டினார்.
இதுதவிர, 2026ம் ஆண்டுக்கான ஜனாதிபதி காவல் பதக்கத்துக்கு ஐ.ஜி., அனித்குமார் சிங்லா, மாகே எஸ்.பி., சரவணன், உருளையன்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலர் சரத் சவுகான் அறிவித்தார்.