sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/செய்தியாளர்கள் சந்திப்பு: கவர்னர் புறக்கணிப்பு

செய்தியாளர்கள் சந்திப்பு: கவர்னர் புறக்கணிப்பு

செய்தியாளர்கள் சந்திப்பு: கவர்னர் புறக்கணிப்பு


ADDED : பிப் 07, 2024 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 04:12 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : அரசு விழாவில் கலந்து கொண்ட கவர்னர் செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்து காரில் ஏறி, புறப்பட்டார்.

புதுச்சேரி கவர்னர் தமிழிசை எந்த நிகழ்வில் பங்கேற்றாலும் செய்தியாளரை சந்திப்பதை தவிர்ப்பது இல்லை. செய்தியாளர் சந்திப்பை ஆர்வத்துடன் வரவேற்கும் அவர், தற்போது செய்தியாளர் சந்திப்பை தவிர்த்து வருகிறார்.

நேற்று கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்த கைவினை கண்காட்சியை துவக்கி வைத்த அவர், செய்தியாளர்சந்திப்பை புறக்கணித்து அவசர அவசரமாக காரில் ஏறி, புறப்பட்டார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமியிடம் லோக்சபா தேர்தலில் போட்டிட பா.ஜ.,வும், என்.ஆர்.காங்., கட்சியும் விருப்பம் தெரிவித்துள்ளன. அதனால் எந்த கட்சி போட்டியிடும் என கேள்வி எழுப்பியதற்கு,ஒவ்வொரு கட்சியும் அவர்கள் போட்டியிட வேண்டும் என தான் விரும்புவார்கள்.இது எப்போதும் உண்டு. அப்படி தான் இப்போதும்' என, கூறி சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us