/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை
/
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை
ADDED : நவ 01, 2024 05:28 AM
காரைக்கால்: காரைக்காலில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக நலவழித்துறை பல்வேறு முன்னோச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கலெக்டர் மணிகண்டன் அறிவுறுத்தலின்படி நேற்று நலவழித்துறை துணை இயக்குனர் சிவராஜ்குமார் தலைமையில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு கொசு புழுக்களை கண்டறிந்து அகற்றினர். மேலும் வீடுகளில் கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்பட்டது.
பின்னர் நலவழித்துறை துணை இயக்குனர் சிவராஜ்குமார் கூறுகையில். மாவட்ட முழுவதுமாக மழைநீர் தேங்கியுள்ளது. அதன் மூலம் டெங்குவை பரப்பும் கொசுக்கள் உருவாகியுள்ளது. உபயோகமற்ற கட்டங்களில் உள்ள நீர் தேக்க தொட்டிகளில் தேங்கியுள்ள நீரில் உருவாகியுள்ள கொசு புழுக்களை கண்டறிந்து அழிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் ஏற்பட்டால் உடனே டெங்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

