/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்விரோத தகராறு : வாலிபர் மீது தாக்குதல்
/
முன்விரோத தகராறு : வாலிபர் மீது தாக்குதல்
ADDED : டிச 17, 2024 05:18 AM
புதுச்சேரி: வாலிபரை முன் விரோதத்தில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அணணன், தம்பி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கரசூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் முனிஸ்வரன், 30; இவர் நேற்று முன்தினம் காலை 9 மணியளவில், அவரது காரில், தம்பி சிவதாசுடன் கூட்ரோடு சென்றார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அதே ஊரைச் சேர்ந்த மூர்த்தி, 31; அவரது தம்பி ராஜவேல் 30, ஆகியோர் முன் விரோதத்தில், காரை வழிமறித்து முனிஸ்வரனை உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
பலத்த காயமடைந்த முனிஸ்வரன் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சேதாரப்பட்டு போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

