பிரதமர் மோடி பிறந்த நாள் விழா ஆயிரம் விளக்கு ஏற்றி சிறப்பு பூஜை
பிரதமர் மோடி பிறந்த நாள் விழா ஆயிரம் விளக்கு ஏற்றி சிறப்பு பூஜை
ADDED : செப் 18, 2026 05:50 AM

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு, அமைச்சர் நமச்சிவாயம், அவரது மனைவி வசந்தி ஏற்பாட்டில், திருக்கனுார் முத்துமாரியம்மன் கோவிலில் ஆயிரம் மகளிர் பங்கேற்ற விளக்கு பூஜை நடந்தது.
குஜராத் மாநில முதல்வராக 13 ஆண்டுகள், பிரதமராக 12 ஆண்டுகள் என, அரசு தலைமை பொறுப்பில் பிரதமர் மோடி மொத்த ம் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததை நாடு முழுதும் பா.ஜ.,வினர் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் மோடியின் பிறந்த நாள் விழா மற்றும் சாதனை விழா கொண்டாடப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அவரது மனைவி வசந்தி நமச்சிவாயம் ஏற்பாட்டில், திருக்கனுார் முத்துமாரியம்மன் கோவிலில் 1,000 மகளிர் பங்கேற்ற விளக்கு பூஜை நடந்தது.
விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், 'பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா அனைவரையும் சென்றடையும் வகையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்துவது, சமுதாயத்தின் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் நபர்களை கண்டறிந்து அவர்களை கவுரவப்படுத்துவது, மருத்துவ முகாம், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி என, சமூகத்திற்கு பயனுள்ள நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
அவரது பிறந்த நாளில் நேற்று மாலை அனைவரின் இல்லங்களில் தீபம் ஏற்றி, அவரது துாய்மையான சேவை மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்' என்றார்.
