பிரதமர் வீடு கட்டும் திட்டம் எம்.எல்.ஏ., ஆணை வழங்கல்
பிரதமர் வீடு கட்டும் திட்டம் எம்.எல்.ஏ., ஆணை வழங்கல்
ADDED : ஜூலை 06, 2026 03:16 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: குடிசை மாற்று வாரியம் மூலம் பிரதம மந்திரி கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு ஆணைகளை நேரு எம்.எல்.ஏ., வழங்கினார்.
புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் சார்பில், பிரதம மந்திரி கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 5 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. அதன்படி, உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு முதல் தவணை ஒரு லட்ச ரூபாய் வழங்குவதற்கான ஆணை மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.
நேரு எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு கல்வீடு கட்டும் ஆணை மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
