/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரதமரின் சூரிய மின்னொளி திட்டம் நாளை 2 இடங்களில் சிறப்பு முகாம்
/
பிரதமரின் சூரிய மின்னொளி திட்டம் நாளை 2 இடங்களில் சிறப்பு முகாம்
பிரதமரின் சூரிய மின்னொளி திட்டம் நாளை 2 இடங்களில் சிறப்பு முகாம்
பிரதமரின் சூரிய மின்னொளி திட்டம் நாளை 2 இடங்களில் சிறப்பு முகாம்
ADDED : ஜன 23, 2026 05:11 AM
புதுச்சேரி: பிரதமரின் சூரிய மின்னொளி திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நாளை இரு இடங்களில் நடக்கிறது.
இதுகுறித்து மின்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையும் இணைந்து பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் வீடுகளில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.30 ஆயிரம், 2 கிலோ வாட்டிற்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோ வாட்டிற்கு ரூ.78 ஆயிரம் மானியமாக மத்திய அரசு வழங்கி வருகிறது.
இத்திட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 2,342 மின் நுகர்வோர் தங்கள் வீடுகளில் சூரிய மின் திட்டத்தை அமைத்துள்ளனர். இவர்களுக்கு ரூ.16.24 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கிடும் பொருட்டு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நாளை 24ம் தேதி லிங்காரெட்டிப்பாளையம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் மகால், கரையாம்புத்துார் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்திலும் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
முகாமில், திட்டத்தின் சிறப்புகள், செயல்முறை மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். மேலும், முகாமில் பதிவு செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் விபரம் வேண்டுவோர், 94890 80373 அல்லது 94890 80374 ஆகிய மொபைல் போன் எண்களில் அல்லது ee2ped@py.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

