ADDED : ஜன 30, 2026 05:21 AM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு அடுத்த மாதம் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வருகை தர உள்ளனர்.
இது குறித்து புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் ராமலிங்கம் கூறியதாவது:
புதுச்சே ரியில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பா.ஜ., சார்பில் மக்களிடம் கருத்துகள் கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. 'உங்களின் விருப்பம் எங்களின் வாக்குறுதி' என்னும் தலைப்பில் இந்த படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த படிவத்தை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி கடற்கரை காந்தி திடல் அருகே இன்று மாலை 5:00 மணியளவில் வெளியிடுகிறார். அந்த படிவத்தில் கருத்து தெரிவிப்பவரின் பெயர், தொகுதி, தொலைபேசி எண் உள்ளி ட்ட விவரங்கள் அடங்கியிருக்கும். படிவத்தில் இருந்து வரும் கருத்துகளின் அடிப்படையில் தேர்தல் வாக்குறுதி அமையும்.
நாளை கட்சியின் மணவெளி, முதலியார்பேட்டை தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. புதுச்சேரிக்கு அடுத்த மாதம் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வருகை தர உள்ளனர். அவர்கள் வருகை தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
