/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு முதல்வர் துவக்கி வைப்பு
/
கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு முதல்வர் துவக்கி வைப்பு
கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு முதல்வர் துவக்கி வைப்பு
கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : பிப் 08, 2026 04:18 AM

புதுச்சேரி: என்.ஆர்.காங்., 16ம் ஆண்டு விழாவையொட்டி, சப்தகிரி அறக்கட்டளை சார்பில், லாஸ்பேட்டையில், இலவச கம்ப்யூட்டர் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகளை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
லாஸ்பேட்டை தொகுதியில், சப்தகிரி அறக்கட்டளை சார்பில், மாணவர்கள் பயன்பெறும் வகையில், இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, ஆங்கிலம் பயிற்சி வகுப்பு மற்றும் பெண்களுக்கான, தையல் பயிற்சி பெற, மையம் அமைக்கப்பட்டது.
இந்த மையத்தை திறந்து, வகுப்புகளை முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார்.
சப்தகிரி அறக்கட்டளை தலைவரும், முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமை தாங்கினார்.ரமேஷ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எல்.எல்.ஏ.,க்கள், சப்தகிரி அறக்கட்டளை நிர்வாகிகள், என்.ஆர்.காங்., பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.