/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எஸ்.ஆர்.கே., பள்ளிக்கு முதல்வர் விருது
/
எஸ்.ஆர்.கே., பள்ளிக்கு முதல்வர் விருது
ADDED : ஜன 30, 2024 06:01 AM

வில்லியனுார், : குடியரசு தின விழாவில் எஸ்.ஆர்.கே .,மேல்நிலைப் பள்ளிக்கு கவர்னர் தமிழிசை முதல்வர் விருது வழங்கி பாராட்டினார்.
கரிக்கலாம்பாக்கம் எஸ்.ஆர்.கே மேல்நிலைப் பள்ளி கடந்த 2022-23ம் கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்விற்கு பள்ளி சார்பில் அதிக மாணவர்களை அனுப்பி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.
இந்த சாதனையை பாராட்டி குடியரசு தின விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, பள்ளி நிர்வாகி மகேந்திரனிடம் 'முதலமைச்சர் விருது' மற்றும் சுழற்கேடையம் வழங்கி பாராட்டினர்.
இது குறித்து பள்ளி நிர்வாகி மகேந்திரன் கூறியதாவது: பள்ளியில் 2024ம் கல்வியாண்டிற்கு எல்.கே.ஜி முதல் பிளஸ் 1 வரையில் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. பிளஸ் 1 வகுப்பில் ஏ1 ஏ., ஏ1 பி., ஏ 2 மற்றும் ஏ 3 ஆகிய பாட பிரிவுகள் உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.