/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்ட விரோத பேனர்களை அச்சடித்தால் லைசென்ஸ் ரத்து! பிரிண்டிங் பிரஸ்கள் மீது நடவடிக்கை
/
சட்ட விரோத பேனர்களை அச்சடித்தால் லைசென்ஸ் ரத்து! பிரிண்டிங் பிரஸ்கள் மீது நடவடிக்கை
சட்ட விரோத பேனர்களை அச்சடித்தால் லைசென்ஸ் ரத்து! பிரிண்டிங் பிரஸ்கள் மீது நடவடிக்கை
சட்ட விரோத பேனர்களை அச்சடித்தால் லைசென்ஸ் ரத்து! பிரிண்டிங் பிரஸ்கள் மீது நடவடிக்கை
ADDED : ஜன 31, 2025 07:52 AM

புதுச்சேரி; பேனர்களை சட்ட விரோதமாக அச்சடிக்கும் பிரிண்டிங் பிரஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க இரு நகராட்சிகளும் தயாராகி வருகின்றன.
புதுச்சேரியில் சட்ட விரோதமாக பேனர்களை வைப்பவர்களை மீது சப் கலெக்டர்களும் தங்களுடைய பகுதிகளில், போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளித்து தொடர்ந்து வழக்கு பதிவும் செய்யப்பட்டு வருகிறது.
அப்படி இருந்தும் கூட பேனர்களை கட்டுப்படுத்த முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது. இதற்கு பேனர்களை அச்சடிக்கும் பிரிண்டிங் பிரஸ்கள் தான் முக்கிய காரணம்.
பேனர்கள் அச்சடிக்கும்போது, அதன் கீழ்ப்பகுதியில் பேனர் அனுமதி அளிக்கப்பட்ட நாள், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அனுமதி எண், அனுமதி அளிக்கப்பட்ட அளவின் விவரம் மற்றும் அனுமதி வழங்கப்பட்ட கால அவகாசம், பேனர் தயார் செய்த பிரசின் பெயர் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும்.
ஆனால், பிரிண்டிங் பிரஸ்கள் அச்சடிக்கும் சட்ட விரோத பேனர்களில், பேனர்கள் வைத்த வர்கள் யார், அந்த பேனர்களை அச்சடித்த அச்சகம் எது, அந்த பேனருக்கான அனுமதி கடிதம் உள்ளிட்ட எந்த தகவல்களும் இருக்காது. இதுவே சட்ட விரோத பேனர்கள் சாலையில் முளைப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இவர்களுக்கு பொதுநலன் பற்றியோ, சமூக அக்கறையோ துளியளவும் இல்லை.
பேனர் சம்பந்தமான ஐகோர்ட் ஆர்டர், கலெக்டர், சப் கலெக்டர் என எவரின் உத்தரவினை மதிப்பதும் இல்லை. கல்லா கட்டினால் மட்டுமே போதும் என்ற மனநிலையிலேயே உள்ளனர்.
சமூக அக்கறை இல்லாமல் சட்ட விரோத பேனர்களை அச்சடிக்கும் பிரிண்டிங் பிரஸ்களால் அரசுக்கு தலைவலியும் கெட்ட பெயரும் தான் ஏற்படுகின்றது.
எனவே, சட்ட விரோதமாக பேனர்களை அச்சடிக்கும் பிரிண்டிங் பிரஸ்கள் மீது தயவு தாட்சன்யமின்றி உறுதியான நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி துறை முடிவு செய்துள்ளது.
நகராட்சி சட்ட துணை விதிகளில் இது தொடர்பாக திருத்தத்தை புதுச்சேரி நகராட்சியும், உழவர்கரை நகராட்சியும் கொண்டு வந்துள்ளன.
அச்சகத்தின் பெயர் இடம் பெறாமல் பேனர்களை அச்சடித்து, கொடுக்கும் பிரிண்டிங் பிரஸ்களை அரசு சீல் வைத்து மூடவும், அவற்றின் லைசென்ஸ் ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து அடுத்த வாரத்தில் இரு நகராட்சிகளும் இணைந்து ஒரே கூட்டத்தை கூட்டி பேனர்களை அச்சடிக்கும் பிரிண்டிங் பிரஸ்களுக்கு கடைசி எச்சரிக்கை கொடுக்கப்பட உள்ளன.
பேனர்களை வைத்த பிறகு, அதன் பின்னால் அலைந்து சென்று அகற்றுவதை விட, பேனர்களை அச்சடிக்கும் கடை களிலேயே முறைப்படுத்தினால் மட்டுமே சட்ட விரோத பேனர்களை நிரந்தரமாக தடுக்க முடியும். உள்ளாட்சி துறை, நகராட்சிகளின் அதிரடி முடிவினை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

