தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலையோர குடும்பத்தினருக்கு முன்னுரிமை அடையாள அட்டை

சாலையோர குடும்பத்தினருக்கு முன்னுரிமை அடையாள அட்டை

சாலையோர குடும்பத்தினருக்கு முன்னுரிமை அடையாள அட்டை


ADDED : ஜன 29, 2025 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2025 06:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : சாலையோரத்தில் வசிக்கும் 14 குடும்பங்களுக்கு, தொகுப்பு வீடு ஒதுக்கி தருவதற்கான முன்னுரிமை அடையாள அட்டையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

உருளையன்பேட்டை, தொகுதிக்குட்பட்ட சின்ன சுப்புராயப் பிள்ளை வீதி, கந்தப்ப முதலியார் வீதி, புஸ்சி வீதி, லப்போர்த் வீதி, மோந்தேரெஸ் வீதி ஆகிய பகுதியில் சாலையோரம் வசிக்கும் 14 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீடு வழங்க கோரி, விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில், லாம்பார்ட் சரவணன் நகரில், தொகுப்பு வீடு ஒதுக்கி தருவதற்கான முன்னுரிமை அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, சட்டசபை முதல்வர் அலுவலகத்தில் நடந்தது.

முதல்வர் ரங்கசாமி பயனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர் திருமுருகன், நேரு எம்.எல்.ஏ., குடிசை மாற்று வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தரராஜி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us