தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குடிநீரில் சோப்பு திரவம் கலந்த விவகாரம் தனியார் நிறுவன மின் இணைப்பு துண்டிப்பு

குடிநீரில் சோப்பு திரவம் கலந்த விவகாரம் தனியார் நிறுவன மின் இணைப்பு துண்டிப்பு

குடிநீரில் சோப்பு திரவம் கலந்த விவகாரம் தனியார் நிறுவன மின் இணைப்பு துண்டிப்பு


ADDED : ஆக 14, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 08:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் அருகே குடிநீரில் சோப்பு திரவம் கலந்த சம்பவத்தை தொடர்ந்து, முறைகேடாக இயங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பாகூர் அடுத்த அரங்கனுார் கிராமத்தில் உள்ள பேட் பகுதியில் கடந்த 11ம் தேதி குடிநீர் குழாயில் தண்ணீர் வந்தபோது, நுரையாக பொங்கி வழிந்தது. தகவலறிந்த பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

அங்குள்ள விஜயா டிரேடர்ஸ் என்ற சோப்பு ஆயில் பேக் செய்யும் சிறிய கம்பெனியில் டேங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சோப்பு திரவம், குடிநீர் குழாயில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, குடிநீரை தவறான முறையில் பயன்படுத்திய கம்பெனிக்கான குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரி மாசுக்கட்டுப்பட்ட குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் உத்திரவின் பேரில், அதிகாரிகள் இளங்கோ, பிரபு மற்றும் ரிஷி ஆகியோர் அரங்கனுார் சென்று அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை சமர்பித்தனர்.

அதில், பொதுமக்களின் சுகாதரத்தை பாதுகாக்கும் பொருட்டு, இத்தொழிற்சாலையின் மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க மின்துறைக்கு, மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் உத்தரவிட்டது. இதையடுத்து, பாகூர் மின் துறை ஊழியர்கள் அந்த நிறுவனத்தின் மின் இணைப்பை நேற்று துண்டித்தனர். விசாரணையில், அவர்கள் மின் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us