தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 12 ஜோதிர்லிங்க தரிசனம் வேள்வி பூஜையுடன் துவக்கம்

12 ஜோதிர்லிங்க தரிசனம் வேள்வி பூஜையுடன் துவக்கம்

12 ஜோதிர்லிங்க தரிசனம் வேள்வி பூஜையுடன் துவக்கம்


ADDED : ஆக 14, 2026 08:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 08:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜோதிர்லிங்க தரிசனம் நேற்று வேள்வி பூஜையுடன் துவங்கியது.

திருச்சி சீராத்தோப்பில், ஜோதிர்லிங்க கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில், பக்தர்கள் சிவலிங்கத்திற்கு அபிேஷகம் செய்யும் வகையில், அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, பிரதிஷ்டை செய்யப்பட்ட 12 ஜோதிர்லிங்கத்தை, புதுச்சேரி, லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள விவேகானந்தா பள்ளி வளாகத்தில், வைத்து தரிசனம் செய்ய 3 நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜோதிர்லிங்க தரிசனம் நேற்று மாலை வேள்வி பூஜையுடன் துவங்கியது. 12 ஜோதிர்லிங்கத்திற்கு செல்வகணபதி எம்.பி., அபிேஷகம் செய்து, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று தரிசனம் செய்தார்.

சிவபுராண பாராயணத்தை அடுத்து பொதுமக்கள் 12 ஜோதிர்லிங்கத்தை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நாளை (16ம் தேதி) வரை நடக்கும், நிகழ்ச்சியில், மாலை 4:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை பக்தர்கள் தங்கள் கைகளால், ஜோதிர்லிங்கத்திற்கு அபிேஷகம்  செய்து வழிபடலாம். இதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரியில் உள்ள அனைத்து சிவனடியார்கள் செய்துள்ளனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us