ADDED : மே 22, 2025 11:23 PM
புதுச்சேரி:தேங்காய்திட்டில் வேலைக்கு செல்வதாக சென்ற தனியார் கம்பெனி ஊழியர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேங்காய்திட்டு, புதுநகரை சேர்ந்தவர் நாகலிங்கம், கொத்தனார். இவரது மகன் தீபன்ராஜ், 20; தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், தீபன்ராஜ் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே மொபைல் போனை பார்த்து கொண்டிருந்துள்ளார். இதனை அவரது தாய் தேவி கண்டித்ததாக தெரிகிறது. இதனால், கோபமடைந்த தீபன்ராஜ், கடந்த 17 ம் தேதி வேலை செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்த வெளியே சென்றவர், இதுவரையில் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை.
தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் தீபன்ராஜ் பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.