ADDED : ஆக 06, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தனியார் கம்பெனி ஊழியர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரியகாலாப்பட்டு, வள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 24; தனியார் கம்பெனி ஊழியர். இவர் கடந்த 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை வேலுசாமி புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.