/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாதி விலைக்கு பொருட்கள் விற்பதாக மோசடி தனியார் கம்பெனி ஊழியர் ரூ.9 லட்சம் இழப்பு
/
பாதி விலைக்கு பொருட்கள் விற்பதாக மோசடி தனியார் கம்பெனி ஊழியர் ரூ.9 லட்சம் இழப்பு
பாதி விலைக்கு பொருட்கள் விற்பதாக மோசடி தனியார் கம்பெனி ஊழியர் ரூ.9 லட்சம் இழப்பு
பாதி விலைக்கு பொருட்கள் விற்பதாக மோசடி தனியார் கம்பெனி ஊழியர் ரூ.9 லட்சம் இழப்பு
ADDED : நவ 25, 2024 05:07 AM
புதுச்சேரி : கஷ்டம்சில் பிடிபடும் மொபைல், டி.வி., உள்ளிட்ட பொருட்களை பாதி விலைக்கு விற்பனை செய்வதாக வாட்ஸ் அப்பில் வந்த விளம்பரத்தை நம்பி ரூ. 9 லட்சத்து 15 ஆயிரம் பணத்தை தனியார் கம்பெனி ஊழியர் ஏமாந்துள்ளார்.
முதலியார்பேட்டை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் ராஜா, இவரது, மொபைல் எண்ணிற்கு, கடந்த மூன்று மாதத்திற்கு முன் வாட்ஸ் அப்பில் கஷ்டம்ஸில் பிடிபடும் பொருட்களை பாதி விலைக்கு கொடுப்பதாக வந்த விளம்பரத்தை நம்பி, அந்த மர்மநபரை தொடர்பு கொண்டுள்ளார்.
அவரும் வாட்ஸ் அப்பிலேயே மொபைல், டி.வி., வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்ற பொருள்கள் அனைத்தும் எங்களிடம் இருக்கிறது. மார்க்கெட் மதிப்பிலிருந்து பாதி விலைக்கு புதிய பொருளை உங்களுக்கு கொடுக்கிறோம் எனகூறியுள்ளார்.
இதையடுத்து, அவர் அனுப்பிய பொருட்களின் விலையை கடையில் விசாரித்தபோது, ரூ. 20 ஆயிரம் பொருள் 10 ஆயிரத்திற்கு கிடைப்பதால், லாபம் என நம்பி, பல்வேறு தவணைகளாக ரூ. 9 லட்சத்து 15 ஆயிரத்து 750 பணத்தை மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ராஜா அனுப்பியுள்ளார். அதன்பின் அவரை தொடர்பு கொண்டபோது, தொடர்பு கொள்ள முடியவில்லை. வாட்ஸ் ஆப்பும் செயல்படவில்லை. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் வழியாக வரும் எந்த வேலை வாய்ப்பு, குறைந்த விலை பொருட்கள், வீட்டிலிருந்து வேலை போன்றவற்றில் பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.