/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.1.57 கோடி இழந்த தனியார் நிறுவன மேலாளர்
/
ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.1.57 கோடி இழந்த தனியார் நிறுவன மேலாளர்
ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.1.57 கோடி இழந்த தனியார் நிறுவன மேலாளர்
ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.1.57 கோடி இழந்த தனியார் நிறுவன மேலாளர்
ADDED : ஜூலை 28, 2025 01:48 AM
புதுச்சேரி: போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்த, தனியார் நிறுவன மேலாளர் ரூ. 1.57 கோடியை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.
புதுச்சேரி, உருளையன்பேட்டை சேர்ந்தவர் செந்தில்குமார், 54; திருபுவனை உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் டிரேடிங் செய்ய விரும்பி சமூக வலைதளத்தில் தேடியபோது, டிரேடிங்கில் முதலீடு செய்து எப்படி திறமையாக சம்பாதிக்கலாம், அதிக லாபத்தை தரும் டிரேடிங் நிறுவனங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்து கொள்ளும்படி விளம்பரம் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை நம்பிய, அவர் மர்ம நபர் தெரிவித்த வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்துள்ளார். பிறகு, அந்த குழுவில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பல்வேறு தகவல்கள் குறித்து தினசரி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆன்லைன் டிரேடிங் தொடர்பான அனைத்து தகவல்களும் தெரிவித்து விட்டதாக நினைத்து தனியார் நிறுவன மேலாளர், மர்ம நபர் அனுப்பிய ஆன்லைன் டிரேடிங் லிங்கில் பல்வேறு தவணைகளாக ஒரு கோடியே 57 லட்சத்து 56 ஆயிரத்து 200 ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதன்மூலம் அவருக்கு 83 கோடியே 95 லட்சத்து 91 ஆயிரத்து 584 ரூபாய் லாபம் வந்துள்ளதாக வாட்ஸ் ஆப் கணக்கில் காட்டியுள்ளது.
இதையடுத்து, அந்த பணத்தை எடுக்க முயன்றபோது, வருமான வரி, ஜி.எஸ்.டி., கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளது. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், பதுச்சேரியை சேர்ந்த பெண் 96 ஆயிரத்து 800, ஆண் நபர் 22 ஆயிரம், நைனார்மண்டபத்தை சேர்ந்த நபர் 39 ஆயிரம், நல்லவாடு சேர்ந்த நபர் 60 ஆயிரத்து 900, பாகூரைச் சேர்ந்தவர் 32 ஆயிரம், சண்முகப்புரத்தை சேர்ந்த பெண் 28 ஆயிரம் என மொத்தம் 7 பேர் மோசடி கும்பலிடம் ஒரு கோடியே 60 லட்சத்து 34 ஆயிரத்து 900 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.