/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் பள்ளி ஆசிரியர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
/
தனியார் பள்ளி ஆசிரியர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
தனியார் பள்ளி ஆசிரியர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
தனியார் பள்ளி ஆசிரியர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
ADDED : ஏப் 23, 2025 04:07 AM
புதுச்சேரி : தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 770 நிரந்தர பணியிடங்கள் காலியாக உள்ளது. ஆனால், அங்கு 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியம் பெற்று பணிபுரியும் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, கோரிக்கையை வலியுறுத்தி கல்வித்துறை இயக்குனரை அலுவலகத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நேற்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு, தனியார் பள்ளி சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலாளர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். தலைவர் வின்சென்ட் ராஜ் முன்னிலை வகித்தார். இதில், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.