தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனியார் சேவை மைய நிறுவனர் பஸ் மோதி படுகாயம்

தனியார் சேவை மைய நிறுவனர் பஸ் மோதி படுகாயம்

தனியார் சேவை மைய நிறுவனர் பஸ் மோதி படுகாயம்


ADDED : மார் 31, 2025 07:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2025 07:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர் : அரசு பஸ் மோதி தனியார் வேலை வாய்ப்பு மைய நிறுவனர் படுகாயமடைந்தார்.

பாகூர் அடுத்த சேலியமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரராகவன், 38; வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை மையம் நிறுவனர்.

இவர் நேற்று முன்தினம் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், அவரது உறவினரை பார்த்து விட்டு தனது பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

கடலுார் - புதுச்சேரி சாலை, பிள்ளையார்குப்பம் சாலை சந்திப்பு அருகே வந்தபோது, கடலுாரில் இருந்து புதுச்சேரி சென்ற தமிழ்நாடு அரசு பஸ் வீரராகவன் பைக் மீது மோதியது.

அதில், படுகாயமடைந்த வீரராகவனை, அருகிலிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விபத்து ஏற்படுத்திய திருத்தனி பகுதியைச் சேர்ந்த பஸ் டிரைவர் சண்முகம் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us