ADDED : ஆக 13, 2025 11:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : அன்னையும் பிதாவும் இசைப்பள்ளி 15ம் ஆண்டு கலைவிழா ஜவகர் நகர் சமுதாய கூடத்தில் நடந்தது.
வைஸ்மேன் பள்ளி நிறுவனர் திலகம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பாஸ்கர் எம்.எல்.ஏ., பங்கேற்று இசை, யோகா, சிலம்பம், நடனம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தேசிய விருதாளர் ஜனார்த்தன் நோக்கவுரையாற்றினார். நடன ஆசிரியர் ராஜேஸ்வர், சரிதா, வயலின் ஆசிரியர் மனோஜ் கருத்துரை வழங்கினர். விஜயலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
ஏற்பாடுகளை ஹர்ஷிதா, விஜயலட்சுமி, சகுந்தலா, ழான்பியர், ஜெயசங்கர், தினேஷ், சாய்ராம், துாயவன், லோகேஷ் செய்திருந்தனர்.
பார்த்திபன் நன்றி கூறினார்.

