ADDED : ஜூலை 04, 2026 02:56 AM

அ நிறம் | அளவு
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், தேர் திருவிழாவையொட்டி, நடந்த கலை நிகழ்ச்சியில், பங்கேற்ற சுபிக் ஷம் நாட்டியாலயா நடன பள்ளி மாணவிகளுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பாகூரில் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், தேர் திருவிழா கடந்த வாரம் நடந்தது. இதனையொட்டி, பாகூர் கிழக்கு வீதியில் உள்ள சுபிக் ஷம் நாட்டியாலயா நடன பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் யோகா நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது. ஏற்பாடுகளை, சுபிக் ஷம் நாட்டியாலயா நிறுவனர் நாகலட்சுமி ஹரிஹரன் செய்திருந்தார். நடனமாடிய மாணவிகள் அனைவருக்கும் நாகராஜன், அன்பழகன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
