/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் தடகள போட்டி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
/
அரசு பள்ளியில் தடகள போட்டி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
அரசு பள்ளியில் தடகள போட்டி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
அரசு பள்ளியில் தடகள போட்டி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
ADDED : ஜூன் 12, 2025 12:23 AM

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தடகள போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில், 275 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
ஆசிரியர் எத்தியராஜ் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் நுார்முகமது முன்னிலை வகித்தார். ஆசிரியை பத்மாவதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூட நுண்கலைத்துறை தலைவர் பிரபாகரன், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். உடற்கல்வித்துறை விரிவுரையாளர் மணி நன்றி கூறினார்.