/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு
/
பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : மே 18, 2025 09:11 PM

புதுச்சேரி : புதுச்சேரி நலப்பணிச் சங்கம் சார்பில் சோரியங்குப்பம் முத்தமிழ்க் கூடல் இல்லத்தில் 10ம் மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.
சங்கத்தின் தலைவர் நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். ஆசிரியர் வேணுகோபால், தாசில்தார் அய்யனார், விரிவுரையாளர் முத்து அய்யாசாமி முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் நந்தகோபால் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் தனராஜா, மகளிர் அமைப்பாளர் விஜயலட்சுமி, வர்ம மருத்துவர் முருகானந்தம் வாழ்த்தி பேசினர். விழாவில், சபாநாயகர் செல்வம் பங்கேற்று, 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டினார். துணைச் செயலர் ரமேஷ் நன்றி கூறினார்.