/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வேளாண் மாணவர்களுக்கு பரிசளிப்பு
/
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வேளாண் மாணவர்களுக்கு பரிசளிப்பு
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வேளாண் மாணவர்களுக்கு பரிசளிப்பு
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வேளாண் மாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : ஜூலை 10, 2025 06:31 AM

காரைக்கால் : காரைக்காலில் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றிப்பெற்ற வேளாண் கல்லுாரி மாணவர்களை கல்லுாரி முதல்வர் பாராட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்., வேளாண் கல்லுாரில் கடந்த 2ம் தேதி மாநில அளவிலான விவசாய கல்லுாரிகளுக்கு இடையேயான விளையாடு போட்டிகள் நடந்தது. இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த வேளாண் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்ற காரைக்கால் நேரு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் கலந்து கொண்டு ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் முதல் பரிசும் மற்றும் பெண்களுக்கான வாலிபால் போட்டியில் மூன்றாம் பரிசும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி முதல்வர் சங்கர், துறைத் தலைவர் ராமநாதன், கல்லுாரி மாணவர் மன்ற அலோசோகர் நாராயணன் ஆகியோர் வெற்றிப் பெற்ற மாணவர்களை பாராட்டினார்.