/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுத்தேர்வில் சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு
/
பொதுத்தேர்வில் சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : ஜன 04, 2025 04:58 AM

திருபுவனை: திருபுவனை தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு அங்காளன் எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார்.
திருபுவனை தொகுதியில் ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு அங்காளன் எம்.எல்.ஏ., பரிசு வழங்கி வருகிறார்.
அதன்படி கடந்த 2023-2024ம் கல்வியாண்டில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மதகடிப்பட்டில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.
அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, திருபுவனை தொகுதியில் அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பள்ளியிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

