/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்குறள் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
/
திருக்குறள் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
திருக்குறள் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
திருக்குறள் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : ஜூலை 26, 2025 08:18 AM

புதுச்சேரி : திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஸ்ரீராம் இலக்கியக் கழ கம் சார்பில், திருக்குறள் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் புதுச்சேரி செயின்ட் ஆண்டனிஸ் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது.
ஓவியப் போட்டியில் 255 மாணவர்கள், பேச்சுப் போட்டியில் 160 பேர், கட்டுரைப் போட்டியில் 91 பேர், என, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை பகுதிகளைச் சேர்ந்த 506 மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா நடந்தது. நிர்வாகி கார்த்திகேயன் வரவேற்றார். புதுச்சேரி வடக்கு சட்டம் ஒழுங்கு எஸ்.பி., வீரவல்லபன் பரிசு வழங்கினார்.
பேச்சுப் போட்டி இடைநிலைப் பிரிவில் சிதம்பரம் ஷெம்போர்ட் பள்ளி மாணவி வர்ஷா, மேல்நிலைப் பிரிவில் புதுச்சேரி அமலோற்பவம் லுார்து அகாடமி மாணவி தனிஷா, கல்லுாரிப் பிரிவில் புதுச்சேரி அன்னை தெரசா கல்லுாரி மாணவி ஸ்டெல்லா முதலிடம் பிடித்தனர்.
ஓவியப் போட்டி இடைநிலைப் பிரிவில் புதுச்சேரி அமலோற்பவம் லுார்து அகாடமி மாணவி சாதனா, மேல்நிலைப் பிரிவில் அதே பள்ளி மாணவி ஹன்சிகா, கல்லுாரி பிரிவில் அரியாங்குப்பம் சிவா பாரதி, பாரதியார் பல்கலைக்கூட மாணவர் சிவா பாரதி முதலிடம் பிடித்தனர்.
கட்டுரைப் போட்டி இடைநிலைப் பிரிவில் புதுச்சேரி அமலோற்பவம் லுார்து அகாடமி மாணவி ஜோஷினி, மேல்நிலைப் பிரிவில் புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி பிரியங்கா தேவி, கல்லுாரி பிரிவில் கடலுார் பெரியார் கல்லுாரி மாணவர் கார்த்திக் முதலிடம் பிடித்தனர்.
வைரக்கண்ணு நன்றி கூறினார்.