sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கோ-கோ விளையாட்டு போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு

/

கோ-கோ விளையாட்டு போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு

கோ-கோ விளையாட்டு போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு

கோ-கோ விளையாட்டு போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு


ADDED : டிச 12, 2024 06:26 AM

Google News

ADDED : டிச 12, 2024 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கோ-கோ விளையாட்டு போட்டியில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

புதுச்சேரி அரசு பள்ளி கல்வி துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் சார்பாக பள்ளிகளுக்கு இடையிலான கோ--கோ, கபடி, வாலிபால், கேரம், யோகா, ஹாக்கி, கிரிக்கெட், வெயிட் லிப்டிங் ஆகிய விளையாட்டு போட்டிகள் கடந்த 7ம் தேதி துவங்கியது.

இதில், கோ-கோ, கபடி முதல் முறையாக லாஸ்பேட்டை பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. கோ-கோ போட்டியில் புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த 192 மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் வட்டம்-2 முதலிடத்தை பிடித்தது. வட்டம்-4 இரண்டாம் இடம், வட்டம்-3 மூன்றாம் இடம், வட்டம் -8 நான்காமிடம் பிடித்தன. 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில், வட்டம்-3 முதலிடம், வட்டம்-2 இரண்டாம் இடம், வட்டம்-4 மூன்றாம் இடம், வட்டம்-7 நான்காம் இடம் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு விளையாட்டு துறை துணை இயக்குநர் வைத்தியநாதன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

நெல்லி தோப்பு பெரியார் நகர் மகாத்மா காந்தி அரசு நடுநிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் துரை, கோ-கோ விளையாட்டு பொறுப்பாளர் லட்சுமி, திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், திட்ட மேற்பார்வையாளர் ஆனந்த், நடுவர்கள் ரகு, பாலாஜி, ஆனந்த் லிங்கம், வேல்முருகன், கமலக்கண்ணன், வித்தியா, மகேஸ்வரி, ரஞ்சிதா, பாரதிராஜா, இளவரசி, பரமேஸ்வரி கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us