/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிலம்பம், கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
/
சிலம்பம், கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
சிலம்பம், கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
சிலம்பம், கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
ADDED : பிப் 06, 2025 06:56 AM

புதுச்சேரி; சிலம்பம் மற்றும் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நவதுர்கா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
திருவண்டார்கோவில் நவதுர்கா ஆங்கில மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவில் சிலம்பம் மற்றும் கராத்தே போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். மாணவர்களுக்கு வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சத்யா நடராஜன் தலைமை தாங்கி, சிலம்பம் மற்றும் கராத்தே போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
பள்ளி துணை முதல்வர் விவேக் நடராஜன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்வழங்கி வாழ்த்தி பேசினார்.
விழாவில் பள்ளியின் சிலம்பம் மற்றும் கராத்தே பயிற்சியாளர் ரவிச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியர்கள் தியாகு, அருண்குமார், செந்தமிழ் நம்பி, அகிலா உட்பட பலர் பங்கேற்றனர்.
பொறுப்பாசிரியர் வினோதினி நன்றி கூறினார்.