/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு
/
விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு
விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு
விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : மார் 12, 2026 03:58 AM

வில்லியனூர்: வில்லியனுார் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியை குணச்செல்வி தலைமை தாங்கினார். ஆசிரியை சங்கர்தேவி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களாக பெண் கல்வி துணை இயக்குனர் ராமச்சந்திரன் மற்றும் வில்லியனுார் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் பங்கேற்று, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டினர்.
விழாவில், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் கலையரசி, ஆசிரியர் சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியை மகாராணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.
உடற்கல்வி ஆசிரியர் முருகையன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அருணாதேவி, கனகா, வள்ளி, ரவிசங்கர், ஜபின், வேலாயுதம், விஜயலட்சுமி, கருணாகரன், உமாதேவி, பிரேமா, வேளாங்கண்ணி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

