/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
/
பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
ADDED : ஜன 17, 2025 05:54 AM

புதுச்சேரி: பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
முதலியார்பேட்டை இளைஞர்கள் நற்பணி சமூக சேவை மன்றம் சார்பில், பொங்கல் பண்டிகையொட்டி பெண்களுக்கான கோலப்போட்டி, சிறுவர்- சிறுமியர்களுக்கான ஓவியப் போட்டி, இளைஞர்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி, ஓட்டப்பந்தயம் , உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
முத்துமாரியம்மன் கோவில் அருகே நடந்த போட்டியில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
பரிசளிப்பு விழாவிற்கு மன்ற தலைவர் ராஜி தலைமை தாங்கினார். அமைப்பாளர் சங்கரய்யா முன்னிலை வகித்தார். செயலாளர் ராமதாஸ், பொருளாளர் குமரன் வரவேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பா.ஜ., மாநில செயலாளர் வெற்றிச் செல்வம், முன்னாள் வக்கீல் சங்கத் தலைவர் குமரன், உள்ளாட்சித் துறை முன்னாள் துணை இயக்குநர் கிருஷ்ணராஜ், தொழிலதிபர்கள் துளசி, ஜெயபிரகாஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
ஆசிரியர் பூங்குழலி பெருமாள் போட்டி நடுவராக செயல்பட்டார்.
ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் கதிரவன், ராம்குமார், பாரதி, பாலாஜி, கிஷோர், மாறன், ஸ்ரீதர், கார்த்திகேயன், அஜய், விஷ்வா செய்திருந்தனர்.