
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : சிறுவள்ளிகுப்பத்தில் விவசாயிகளுக்கான விதை நேர்த்தி செய்தல் குறித்து காரைக்கால் வேளாண் கல்லுாரி மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
காரைக்கால் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் திருக்கனுார் அடுத்த தமிழக பகுதியாக, குச்சிப்பாளையத்தில் ஊரக வேளாண்பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சிறுவள்ளிகுப்பம் கிராம விவசாயிகளுக்கு இரண்டு நாள் வேளாண் தொடர்பான செயல்முறை விளக்கம் அளித்தனர்.
அதில், மாணவிகள் கிழங்கு வகையில் மருந்திடுதல், விதை நேர்த்தி செய்தல், இளநீர்மோர் கரைசல், தென்னை மற்றும் மல்லி செடிகளில் நோய் தடுப்பு மேலாண்மை முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு மாணவிகள் பதில் அளித்தனர்.

