/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீர்த்தவாரியில் பேனர் வைக்க தடை
/
தீர்த்தவாரியில் பேனர் வைக்க தடை
ADDED : பிப் 17, 2024 04:48 AM
புதுச்சேரி : புதுச்சேரி வைத்திக்குப்பம், வீராம்பட்டினம் கடற்கரை மற்றும் வில்லியனுார் திருக்காஞ்சி கோவிலில் வரும் 24ம் தேதி மாசிமக தீர்த்தவாரி நடக்கவுள்ளது.
இதில், புதுச்சேரி, தமிழக பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று புனித நீராடி, தர்ப்பணம் கொடுப்பர்.
இந்த நிலையில் மாசிமக தீர்த்தவாரி ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் அலுவலத்தில் கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில், வருவாய், உள்ளாட்சி, பொதுப்பணி, சுகாதாரம், நகராட்சி, போலீஸ், தீயணைப்பு, கொம்யூன் நிர்வாகங்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் குலோத்துங்கன் பேசியதாவது;
மாசிமக தீர்த்தவாரிக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
பேனர்கள் வைப்பது ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
திருக்காஞ்சி ஆற்றங்கரையில் மீட்புக்குழு வீரர்களுக்கு தனி சீருடை வழங்கி கண்காணிப்பு பணியில் ஈடுப்பட வேண்டும் என கூறினார்.