/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.16.72 கோடியில் திட்டப் பணிகள் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பு

ADDED : ஜூலை 02, 2025 01:51 AM

புதுச்சேரி : ரூ. 16.72 கோடி செலவில் முடிக்கப்பட்ட திட்டபணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
புதுச்சேரி உள்ளாட்சித் துறை சார்பில், உழவர்கரை நகராட்சி மூலம் 'புதுமை ஒருங்கிணைப்பு மற்றும் நிலைத்தத் தன்மைக்கான நகர முதலீடுகள் 2.0' திட்டத்தின் கீழ் ரூ.16.72 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு, முடிக்கப்பட்ட திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா பாவாணர் நகரில் உள்ள பூங்காவில் நேற்று நடந்தது.
விழாவிற்கு, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தனர்.
விழாவில், சபாநாயகர் செல்வம், சிவசங்கரன் எம்.எல்.ஏ., தலைமை செயலர் சரத்சவுகன், உள்ளாட்சித்துறை செயலர் கேசவன், உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் நன்றி கூறினார்.