/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
152 கடை நிலை அரசு ஊழியர்களுக்கு பல்நோக்கு ஊழியர்களாக பதவி உயர்வு
/
152 கடை நிலை அரசு ஊழியர்களுக்கு பல்நோக்கு ஊழியர்களாக பதவி உயர்வு
152 கடை நிலை அரசு ஊழியர்களுக்கு பல்நோக்கு ஊழியர்களாக பதவி உயர்வு
152 கடை நிலை அரசு ஊழியர்களுக்கு பல்நோக்கு ஊழியர்களாக பதவி உயர்வு
ADDED : மார் 05, 2024 05:07 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 152 கடை நிலை அரசு ஊழியர்களுக்கு பல்நோக்கு பொது ஊழியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு இயந்திரத்தின் கடை நிலை ஊழியர்களாக வாட்ச்மேன், சானிட்டரி அசிஸ்டண்ட், சானிட்டரி ஹெல்பர், பியூன், அட்டண்டர் உள்ளிட்ட ஐந்து பதவிகள் இருந்தன. இவை, குரூப் 'டி' என, அழைக்கப்பட்டன.
ஆறாவது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டபோது, இந்த பதவிகள் பல்நோக்கு அரசு ஊழியர்களாக, அதாவது, 'சி' குரூப் கீழ் கொண்டு வரப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது. சம்பளமும் அதிகரிக்கப்பட்டது.
இதன்படி, சானிட்டரி அசிஸ்டண்ட், சானிட்டரி ஹெல்பர் பதவிகள் பல்நோக்கு அவுஸ்கீப்பிங் என்றும், வாட்ச்மேன் பதவி பல்நோக்கு செக்யூரிட்டி என்றும், பியூன், அட்டண்டர் பதவிகள் பல்நோக்கு பொது அரசு ஊழியர்களாக மாற்றப்பட்டது.
இதன்படி பல்நோக்கு அவுஸ்கீப்பிங்,பல்நோக்கு செக்யூரிட்டி பணியாற்றி வந்த 152 பேரை பல்நோக்கு பொது ஊழியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.மேலும் பதவி உயர்வினை தொடர்ந்து 43 பல்நோக்கு பொது ஊழியர்கள் பல்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான அறிவிப்பினை நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.

