/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கால்நடைதுறையில் 10 பேருக்கு பதவி உயர்வு ஆணை வழங்கல்
/
கால்நடைதுறையில் 10 பேருக்கு பதவி உயர்வு ஆணை வழங்கல்
கால்நடைதுறையில் 10 பேருக்கு பதவி உயர்வு ஆணை வழங்கல்
கால்நடைதுறையில் 10 பேருக்கு பதவி உயர்வு ஆணை வழங்கல்
ADDED : டிச 03, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி கால்நைடைப் பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்தறையில் பணியாற்றி 10 பேருக்கு பதவி உயர்வுக்கான ஆணையை முதல்வர் வழங்கினார்.
புதுச்சேரி அரசு, கால்நடைப் பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறையில் கால்நடை உதவியாளர்களாகப் பணிபுரிந்து வந்த 10 ஊழியர்கள் களப் பணியாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதற்கான ஆணைகளை முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி சட்டசபையில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், அரசுச் செயலர் (கால்நடைப் பராமபரிப்பு) சவுதாரி முகமது யாசின், துறை இயக்குநர் லதா மங்கேஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.