/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்க அரசாணை வெளியீடு
/
விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்க அரசாணை வெளியீடு
விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்க அரசாணை வெளியீடு
விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்க அரசாணை வெளியீடு
ADDED : ஜன 03, 2024 06:34 AM
புதுச்சேரி : புதுச்சேரி விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் வேளாண் துறை சார்பில் பல்வேறு மானிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அதன்படி, அதிக உற்பத்தி நெல் ரகம், இயற்கை முறை விவசாயம், தோட்டக்கலை காய்கறி உற்பத்தி செய்வோருக்கு கூடுதல் மானிய உதவிகள் அறிவிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதியில் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரமாக வழங்கப்பட்ட மானியம், ரூ. 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். பாரம்பரிய இயற்கை முறை நெல்லுக்கு ரூ. 16 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
சிறுதானியத்திற்கு வழங்கப்பட்ட ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் மானியம், ரூ. 7 ஆயிரமாக வழங்கப்படும். பயறு வகைகளுக்கு வழங்கப்பட்ட மானியம் ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ. 4 ஆயிரமாக உயர்த்தப்படும். மணிலாவுக்கு ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 8 ஆயிரம், எள்ளுக்கு ரூ. 3 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.
பட்டியலின விவசாயிகளுக்கு நெல்லுக்கு ரூ. 9 ஆயிரம், ஆர்கானிக் நெல்லுக்கு ரூ. 18 ஆயிரம், சிறுதானியத்திற்கு ரூ. 8 ஆயிரம், பயறு வகைகளுக்கு ரூ. 5 ஆயிரம், மணிலாவுக்கு ரூ. 9 ஆயிரம், எள்ளுக்கு ரூ. 6 ஆயிரம் மானியம் கிடைக்கும்.
மேலும், பூச்சி கொல்லிகள், பூஞ்சான கொல்லிகளை 75 சதவீத மானியத்திலும், பட்டியலின விவசாயிகள் 100 சதவீத மானியத்திலும் பெறலாம்.
முந்திரி விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ. 50 ஆயிரம் குளிர்கால ைஹபிரீட் காய்கறிகள் உற்பத்திக்கு ரூ. 12 ஆயிரம், தேங்காய் உற்பத்திக்கு ரூ. 5 ஆயிரம், மரவள்ளிக்கு ரூ. 7 ஆயிரம் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது.